லைகா சொத்துக்களை முடக்க வேண்டும்.. வழக்கு தொடர்ந்த நடிகர் விஷால்

By Parthiban.A Jan 02, 2024 05:30 PM GMT
Report

நடிகர் விஷால் மற்றும் லைகா நிறுவனம் இடையே இருக்கும் பிரச்சனை தொடர்பான வழக்கு நீண்ட நாட்களாக நடந்து வருகிறது.  

விஷால் பைனான்சியர் அன்புசெழியர் எனபவரிடம் வாங்கிய 21 கோடி 29 லட்சம் ருபாய் கடனை திரும்ப செலுத்தாத நிலையில் அதை லைகா நிறுவனம் ஏற்றுக்கொண்டது. ஆனால் அந்த பணத்தை லைகா நிறுவனத்திற்கு திருப்பி செலுத்தவில்லை என கூறி வழக்கு தொடரப்பட்டது.

கடனை ஏன் கொடுக்கவில்லை, சொத்து விவரங்களை தாக்கல் செய்யுங்க என விஷாலுக்கு நீதிமன்றம் பல முறை உத்தரவிட்டது. அந்த வழக்கு ஒருபக்கம் நடந்து வருகிறது.

லைகா சொத்துக்களை முடக்க வேண்டும்.. வழக்கு தொடர்ந்த நடிகர் விஷால் | Vishal Files A New Case On Lyca

லைகா சொத்துக்களை முடக்க விஷால் வழக்கு

இந்நிலையில் விஷால் தற்போது ஒரு புது வழக்கை லைகா மீது தொடர்ந்திருக்கிறார். சண்டக்கோழி 2 படத்தின் தமிழ், தெலுங்கு ரிலீஸ் உரிமை மற்றும் சாட்டிலைட் உரிமையை லைகா நிறுவனம் 23 கோடியே 22 லட்சத்திற்கு வாங்கியதாம்.

அதற்கு அவர்கள் ஜிஎஸ்டி செலுத்தாததால் அதை நான் செலுத்தினேன், அதை வட்டியோடு சேர்ந்து திரும்ப செலுத்த வேண்டும். இல்லை என்றால் லைகாவின் சொத்துக்களை முடக்க வேண்டும் என விஷால் நீதிமன்றத்தில் கேட்டிருக்கிறார்.

லைகா தற்போது 500 கோடி முதலீட்டில் எடுத்து வரும் இந்தியன் 2 படம் தோல்வி அடைந்தால் அவர்கள் நிதி நெருக்கடியில் சிக்கி எனக்கு வர வேண்டிய பணம் வராமல் போகும் என்பதால் தற்போதே சொத்துக்களை முடக்க வேண்டும் என விஷால் தரப்பு கேட்டிருக்கிறது.   

இதற்கு லைகா பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பி, வழக்கு வரும் ஜனவரி 19ம் தேதிக்கு நீதிமன்றம் தள்ளிவைத்து இருக்கிறது.

லைகா சொத்துக்களை முடக்க வேண்டும்.. வழக்கு தொடர்ந்த நடிகர் விஷால் | Vishal Files A New Case On Lyca

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US