பொண்ணு பாத்தாச்சு, அது முடிந்து அடுத்த முகூர்த்தத்தில் திருமணம்.. முதன்முறையாக கூறிய விஷால்
நடிகர் விஷால்
நடிகர் விஷால், தமிழ் சினிமாவில் நுழைந்து சில ஹிட் படங்கள் கொடுத்தவர்.
இவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் மயங்கி விழுந்த விஷயம் அனைவருக்குமே பதற்றத்தை ஏற்படுத்தியது, இப்போது நலமாக உள்ளார்.
திருமணம்
அண்மையில் நடிகர் விஷால் நடிகர் சங்க கட்டடம், திருமணம் குறித்து ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.
அதில் அவர், நடிகர் சங்க கட்டிடத்தின் பணி முடிந்த பிறகு தான் திருமணம் என கூறியிருந்தேன், அந்த வேலை விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது.
இன்னும் சில மாதத்தில் பணி முடிவடைந்து விடும், ஆகஸ்ட் 15ம் தேதி நடிகர் சங்க கட்டிடத்தின் திறப்பு விழாவை நடத்தலாம் என திட்டமிட்டு இருக்கிறோம்.
அதன்பின் ஆகஸ்ட் 29ம் தேதி என்னுடைய பிறந்தநாள் என்பதால் திருமணம் பற்றி அறிவிப்பேன். என்னுடைது காதல் திருமணமாக இருக்கும் கடந்த சில மாதமாக அந்த காதல் சென்று கொண்டு உள்ளது என பேசியுள்ளார்.
கட்டடம் திறந்த அடுத்த முகூர்த்தத்தில் திருமணம் தான் என கூறியுள்ளார்.