விஷாலுடன் காதல் திருமணமா? உண்மையை சொன்ன நடிகை அபிநயா
நடிகர் விஷால் 45 வயதாகியும் தற்போது வரை திருமணம் செய்யாமல் இருக்கிறார். அவருக்கு ஆந்திராவை சேர்ந்த அனிஷா என்ற பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் திருமணம் நின்றுபோனது.
விஷால் - அபிநயா
அதற்க்கு பிறகு விஷால் தற்போது நாடோடிகள் பட புகழ் நடிகை அபிநயாவை காதலித்து வருகிறார் என்றும் அவரை விரைவில் திருமணம் செய்ய இருக்கிறார் என்றும் தகவல் நேற்று பரவியது.
அபிநயா காதுகேட்காத மற்றும் வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி என்பதால் இந்த திருமண செய்தி சினிமா வட்டாரத்தில் வேகமாக பரவியது.
உண்மை இதுதான்
இந்நிலையில் இது பற்றி நடிகை அபிநயா விளக்கம் கொடுத்து இருக்கிறார். "மார்க் ஆண்டனி என்ற படத்தில் தான் நாங்கள் கணவன் மனைவியாக நடிக்கிறோம், நிஜத்திலேயே அப்படி என வதந்தி பரப்பி இருக்கிறார்கள், அது உண்மை இல்லை" என அவர் கூறி இருக்கிறார்.

