CM விஜய்யை சந்திக்க பூங்கொத்து கூட இல்லாமல் வந்த விஷால்.. அதற்கு சொன்ன காரணம்
நடிகர் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு சினிமா துறையினர் பலரும் அவரை நேரில் சந்தித்து சினிமா துறை தொடர்பான பல கோரிக்கைகளை வைத்து வருகிறார்கள். டிக்கெட் விலையை உயர்த்த வேண்டும், ஓடிடி புதிதாக அரசு சார்பில் தொடங்க வேண்டும், டிக்கெட் புக்கிங் தளம் தொடங்க வேண்டும் எனப் பல கோரிக்கைகளை சினிமா துறையினர் விஜய்க்கு வைத்திருக்கின்றனர்.
அனைத்துக் கோரிக்கைகளையும் விஜய் உடனே நிறைவேற்றவில்லை என்றாலும் கூடிய விரைவில் நிறைவேற்றுவார் என எதிர்பார்ப்போடு சினிமா துறையினர் இருக்கின்றனர்.
இந்நிலையில் விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்க தினமும் பல முன்னணி சினிமா பிரபலங்கள் நேரில் சந்தித்து வருகிறார்கள். நேற்று நடிகர் சிம்ரன், ஷாம், சிம்பு உள்ளிட்ட பல நடிகர்கள் விஜயை சந்தித்து வாழ்த்து தெரிவித்திருந்தனர். அதன் புகைப்படங்களும் வைரலாகி இருந்தது.

வெறும்கையுடன் சென்ற விஷால்
இந்நிலையில் இன்று நடிகர் விஷால் முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்துப் பேசி இருக்கிறார்.
அப்போது அவர் சால்வை, பூங்கொத்து என எதுவும் இல்லாமல் வெறும் கையுடன் தான் சென்றிருக்கிறார். அதற்கான காரணம் என்ன என்பதையும் Xல் அவர் பதிவிட்டிருக்கிறார்.
'அந்தப் பணத்தை நான் மூன்று ஏழைப் பெண் குழந்தைகளின் கல்விக்காகப் பயன்படுத்தி இருக்கிறேன். அதை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி' எனவும் விஜய்க்கு நன்றி கூறியிருக்கிறார் அவர்.
லயோலா காலேஜில் இருந்தே தெரியும்
லயோலா கல்லூரியில் இருந்தே, கடந்த பல வருடங்களாக, நான் உங்களை டார்லிங் என்றுதான் அழைத்து வருகிறேன். வளரும் ஸ்டாராக இருந்து பல தடைகளும் விமர்சனங்களையும் தாண்டி நீங்கள் சூப்பர் ஸ்டார் ஆன நிலையில் தற்போது முதலமைச்சராகவும் பதவி ஏற்றுஇருக்கிறீர்கள்.
தற்போது பதவி மாறியிருக்கலாம் ஆனால் நீங்கள் மாறவில்லை. தற்போது உங்களைச் சந்தித்தபோது அதை உணர முடிந்தது என விஷால் கூறி இருக்கிறார்.
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan
Switzerland Plus ஒப்பந்தம் மூலம் பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர திட்டம் News Lankasri
பிரித்தானியாவில் தொழிலாளர்களை விட..வேலையின்மை உதவித்தொகை பெறுவோர் அதிகம் உள்ள பகுதிகள் News Lankasri