ஆந்திர அரசியலில் நுழைகிறாரா நடிகர் விஷால்! பரபரப்பான செய்தி பற்றி அவரே விளக்கம்
நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவர். தொடர்ந்து சினிமாவில் பிசியாக நடித்து வரும் அவர் நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என சினிமா சங்கங்களின் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். நடிகர் சங்க தேர்தலில் அவரது பாண்டவர் அணி தான் சமீபத்தில் ஜெயித்தது.
இந்நிலையில் விஷால் விரைவில் ஆந்திர அரசியலில் நுழைய போகிறார் என செய்தி பரவியது. அவர் குப்பம் தொகுதியில் போட்டியிடப்போகிறார் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில் இது வதந்தி என நடிகர் விஷால் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.
"இதை முற்றிலும் மறுக்கிறேன். இது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. யாரும் என்னை தொடர்பு கொள்ளவும் இல்லை. இப்படிப்பட்ட செய்திகள் எப்படி வருகிறது என தெரியவில்லை."
"எனக்கு எப்போதும் சினிமா, சினிமா மட்டும்தான். ஆந்திர அரசியலில் நுழையும் எண்ணம் இல்லை, சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக போட்டியிடவும் இல்லை" என விஷால் குறிப்பிட்டு இருக்கிறார்.
— Vishal (@VishalKOfficial) July 1, 2022