திருமணம் பற்றி கேட்கப்பட்ட கேள்வி- அப்படி இப்படி சுற்றி ஒரு பதில் கூறிய நடிகர் விஷால்

By Yathrika Apr 21, 2024 09:00 AM GMT
Report

நடிகர் விஷால்

தமிழ் சினிமாவில் சிங்கிளாக இருக்கும் நடிகர்களில் ஒருவர் விஷால்.

உதவி இயக்குனராக இருந்து பின் நாயகனாக கலக்க தொடங்கியவர் நடிப்பில் அடுத்து ரத்னம் என்ற திரைப்படம் வெளியாக இருக்கிறது. ஹரி இயக்கத்தில் விஷால், ப்ரியா பவானி ஷங்கர் நடித்துள்ளனர்.

அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். வரும் ஏப்ரல் 26ம் தேதியும் படம் ரிலீஸ் ஆக உள்ளது.

திருமணம் பற்றி கேட்கப்பட்ட கேள்வி- அப்படி இப்படி சுற்றி ஒரு பதில் கூறிய நடிகர் விஷால் | Vishal Opens Up About Marriage Plan

திருமணம்

திருமண வயது வந்தும் சிங்கிளாகவே இருக்கும் பிரபலங்கள் சிலர் உள்ளார்கள், அதில் ஒருவர் தான் நடிகர் விஷால். அண்மையில் ஒரு பேட்டியில் அவர் திருமணம் குறித்து பேசும்போது, எனது பெற்றோர்கள் எப்போது திருமணம் என கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.

ஆர்யாவுக்கு திருமணம் முடிந்த பின் எனது திருமணம் என்றேன், அவருக்கு திருமணம் முடிந்து குழந்தையே பெற்றுவிட்டார். பின் நடிகர் சங்க கட்டடம் முடிந்ததும் எனது திருமணம் என்றேன்.

முதல் காதலியை தேட தொடங்கும் மனோஜ், இடையில் முத்து: சிறகடிக்க ஆசை புரொமோ

முதல் காதலியை தேட தொடங்கும் மனோஜ், இடையில் முத்து: சிறகடிக்க ஆசை புரொமோ

அம்மா திருமணம் பற்றி கேட்டபோது, இன்னும் சல்மான் கான், பிரபாஸ் போன்றவர்களே திருமணம் செய்துகொள்ளவில்லை, அவர்களுக்கு முடிந்த பின்னர் தான் என் திருமணம் நடக்கும் என கூறிவிட்டேன்.

கார்த்தியின் தீவிர முயற்சியால் இந்த ஆண்டிற்குள் நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டால் நிச்சயம் 2024 இறுதிக்குள் என்னுடைய திருமணம் நடக்கும், ஆனால் பெண் யார் என்று எனக்கே தெரியவில்லை என கூறி இருக்கிறார்.

சல்மான் கான், பிரபாஸ் என அப்படி இப்படி ஒரு காரணங்கள் கூறி திருமணம் குறித்து முடித்துவிட்டார்.

திருமணம் பற்றி கேட்கப்பட்ட கேள்வி- அப்படி இப்படி சுற்றி ஒரு பதில் கூறிய நடிகர் விஷால் | Vishal Opens Up About Marriage Plan

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US