பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து வெளியேறிய பிறகு விஷால் வெளியிட்ட வீடியோ- என்ன போட்டுள்ளார் பாருங்க
பாக்கியலட்சுமி
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2019ம் ஆண்டு நிறைய புதிய கலைஞர்களுடன் தொடங்கப்பட்ட ஒரு தொடர் பாக்கியலட்சுமி.
ஸ்ரீமோயி என்ற தொடரின் ரீமேக்கான இந்த பாக்கியலட்சுமி தொடர் மக்களின் மனதை வென்றுள்ளது. பாக்கியா கோபியால் ஏமாற்றப்பட்டு தனியாக வந்த சொந்த காலில் நிற்பது பல பெண்களுக்கு ஒரு தைரியத்தை கொடுத்திருக்கிறது.
அதாவது பிரச்சனையை கண்டு துவண்டு போகாமல் போராடும் அவரது எண்ணத்தை மக்கள் வரவேற்கிறார்கள். தற்போது கதையில் கோபி, பாக்கியாவை பழிவாங்க தனது அம்மாவை தன்னுடன் அழைத்து செல்கிறார்.
இதனால் கோபி, ராதிகா, அவரது அம்மா, ஈஸ்வரி என 3 பேருக்கு இடையில் மாட்டிக்கொண்டு தவிக்கிறார்.
விஷாலின் பதிவு
இந்த நிலையில் இன்றைய நிகழ்ச்சி முதல் தொடரில் எழிலாக விஷாலுக்கு பதில் நவீன் என்பவர் நடிக்க இருக்கிறார்.
திடீரென பாக்கியலட்சுமி தொடரில் இருந்து விஷால் விலகியுள்ளார், ஆனால் என்ன காரணம் என்பது தெரியவில்லை.
இந்த நிலையில் விஷால் தனது இன்ஸ்டாவில், புதிய அறிவிப்புகள் வர இருக்கிறது என மாஸான வீடியோவுடன் பதிவு செய்துள்ளார். இதோ அவரது பதிவு,