மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் செய்த முக்கிய விஷயத்தை இனி தான் செய்வதாக ஒப்புக்கொண்ட நடிகர் விஷால்- பாராட்டும் ரசிகர்கள்
கன்னட சினிமாவே கடந்த சில நாட்களுக்கு முன்பில் இருந்து கடும் சோகத்தில் உள்ளது. காரணம் அவர்கள் மிகவும் நேசித்த நடிகர் புனித் ராஜ்குமார் அவர்கள் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
நன்றாக காலையில் கூட அண்ணன் நடித்துள்ள படத்திற்கு வாழ்த்து எல்லாம் கூறிவிட்டு ஜிம் சென்றுள்ளார். அங்கு உடற்பயிற்சி செய்துவிட்டு வந்த அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட சிகிச்சைக்கு மருத்துவமனை அழைத்து வந்தும் பயன் இல்லாமல் போய்விட்டது.
புனித் ராஜ்குமார் நடிப்பதை தாண்டி பலருக்கு நிறைய உதவிகள் செய்து வருகிறார். அதில் ஒன்று 1800 மாணவர்களுக்கு இலவச கல்வி உதவி செய்கிறார். இனி அவர்களுக்கான கல்வி உதவியை அடுத்த வருடத்தில் இருந்து தான் செய்வதாக நடிகர் விஷால் எனிமி பட நிகழ்ச்சியில் உறுதி அளித்துள்ளார்.
அவர் கூறிய அந்த விஷயம் கேட்டவர்கள் விஷாலை பாராட்டி வருகிறார்கள், ரசிகர்களும் கொண்டாடுகிறார்கள்.
— Manobala (@manobalam) November 1, 2021
ஓங்கும் உக்ரைன் கை... மூழ்கடிக்கப்பட்ட ரஷ்ய இராணுவக் கப்பல்: தீவிரமடையும் எரிபொருள் நெருக்கடி News Lankasri
மீண்டும் முடிவை மாற்றிய ட்ரம்ப்... மத்திய கிழக்கு நாடுகள் ஒப்புக்கொண்டதாகவும் அறிவிப்பு News Lankasri