விஜய் முடிவை விமர்சித்த விஷால்.. பதிலடி கொடுத்த நடிகர் அருண் விஜய்

By Parthiban A May 17, 2026 04:28 PM GMT
Report

நடிகர் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு அவரை சினிமா துறையை சேர்ந்தவர்கள் நேரில் சந்தித்து பல கோரிக்கைகள் வைத்து வருகிறார்கள்.

நடிகர் சங்க நிர்வாகிகள் தொடங்கி நடிகர் கமல்ஹாசன் வரை பலரும் நேரில் சந்தித்து விஜய்க்கு வாழ்த்து கூறினார்கள். அது மட்டுமின்றி பல கோரிக்கைகளையும் அவரிடம் வைத்தார்கள்.

இந்நிலையில் தற்போது Film Technology and Cinematograph Act துறை அமைச்சராக ராஜ் மோகனை முதலமைச்சர் விஜய் நியமித்து இருக்கிறார்.

அதை நடிகர் விஷால் தற்போது விமர்சித்து இருக்கிறார். சினிமா பற்றி எல்லாம் தெரிந்த விஜய் அந்த துறையை கவனிக்காமல், இந்த துறையில் எந்த அனுபவமும் இல்லாத ஒருவரை ஏன் நியமித்தீர்கள் ஏன் விஷால் கேட்டிருக்கிறார். 

விஜய் முடிவை விமர்சித்த விஷால்.. பதிலடி கொடுத்த நடிகர் அருண் விஜய் | Vishal Questions Vijay See Arun Vijay Reply

பதிலடி

விஷால் பேசி இருப்பது அமைச்சராக பதவி ஏற்கும் ராஜ் மோகனை அவமானப்படுத்துவது போல இருப்பதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் அருண் விஜய் விஷால் பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக கண்டனம் தெரிவித்து இருக்கிறார். "முடிவுகளில் தயவு செய்து குறுக்கிடாதீர்கள். சினிமா துறையில் இருந்து வந்தவர் என்பதால், நமது பிரச்சனைகள் அவருக்கு தெரியும், உதவுவார்."

"அவரது முடிவுக்கு மரியாதை கொடுங்கள். என்ன நடக்கிறது என பாருங்க. இப்போது எதுவம் முடிவுக்கு வந்துவிடாதீர்கள்" என அருண் விஜய் பதிவிட்டுள்ளார். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US