முடிஞ்சா தடுத்து பாரு.. ரெட் கார்டு போட்ட தயாரிப்பாளர் சங்கத்தை எச்சரித்த விஷால்
நடிகர் விஷாலுக்கு ரெட் கார்டு போயிருப்பதாக தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டு இருக்கும் அறிவிப்பு தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்ப்படுத்தி இருக்கிறது. அவரை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தயாரிப்பாளர் சங்கத்தை கலந்தாலோசித்து பணிகளை துவங்க வேண்டும் என கூறப்பட்டு இருக்கிறது.
2017 - 19 காலகட்டத்தில் விஷால் தயாரிப்பாளர் சங்க தலைவராக இருந்த போது சங்கத்தின் நிதியை தவறாக பயன்படுத்தியதால் 12 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. அந்த தொகையை திரும்ப செலுத்த வேண்டும் என பல முறை கேட்டும் விஷால் பதில் அளிக்கவில்லை. அதனால் ஏற்கனவே செயற்குழுவில் எடுத்த முடிவில் அடிப்படையில் விஷாலை வைத்து படம் எடுப்பவர்கள் தயாரிப்பாளர் சங்கத்தை கலந்தோலோசித்துவிட்டு பணிகளை தொடங்க வேண்டும் என கேட்டுக்கொள்வதாக தெரிவித்து இருக்கின்றனர்.
விஷால் பதிலடி
தனக்கு ரெட் கார்டு போடப்பட்டு இருப்பதற்கு விஷால் பதிலடி கொடுத்து இன்ஸ்டாக்ராமில் பதிவிட்டு இருக்கிறார்.
"அது எல்லோரும் சேர்ந்து எடுத்த முடிவு என உங்களுக்கு தெரியாதா. அதில் உங்களுடன் தற்போது இருக்கும் திரு கதிரேசனும் இருந்தார். மூத்த/நலிந்த தயாரிப்பாளர்களுக்கு உதவ தான் அந்த நிதி பயன்படுத்தப்பட்டது."
"உங்க வேலையை ஒழுங்காக செய்யுங்க. சினிமா துறைக்கு நிறைய தேவை இருக்கிறது. இரட்டை வரிவிதிப்பு, தியேட்டர் maintenance கட்டணம் என இன்னும் பல விஷயங்கள் தீர்க்கப்பட வேண்டி இருக்கிறது."
"விஷால் தொடர்ந்து படம் நடிப்பார். முடிந்தால் தடுத்து பாருங்க" என விஷால் பதிவிட்டு இருக்கிறார்.