விஷால் சாப்பிடும் முன் கும்பிடும் பழக்கம்.. ட்ரோல் செய்பவர்களுக்கு கொடுத்த பதிலடி
நடிகர் விஷால் கோலிவுட்டில் முக்கிய நடிகராக இருந்து வருகிறார். அவர் தற்போது ஹரி இயக்கத்தில் ரத்னம் என்ற படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். அந்த படம் வரும் ஏப்ரல் 26ம் தேதி திரைக்கு வருகிறது.
விஷால் எப்போதும் சாப்பிடும்போது பல மதத்தின் கடவுள்களை கும்பிட்டுவிட்டு அதன்பிறகு தான் சாப்பிட தொடங்குவார். அதை பார்த்துவிட்டு நடிகர் யோகி பாபு கொடுத்த ரியாக்ஷன் வீடியோவும் இணையத்தில் சில மாதங்களுக்கு முன் வைரல் ஆனது. நெட்டிசன்களும் அந்த வீடியோவை வைத்து விஷாலை கலாய்த்து வந்தனர்.
பதில் அளித்த விஷால்
இந்நிலையில் விஷால் தற்போது ட்ரொல்களுக்கு பதில் அளித்து இருக்கிறார். ரத்னம பட விழாவில் பேசிய அவரிடம் செய்தியாளர்கள் அது பற்றி கேட்டனர்.
நான் இதை பல வருடங்களாக செய்து வருகிறேன். என்னை ட்ரோல் செய்பவர்கள் பற்றி வருத்தம் இல்லை. அதற்காக விளக்கம் கொடுக்கவும் எனக்கு அவசியம் இல்லை என கூறி இருக்கிறார்.