சிம்புவுடன் மோத முடிவெடுத்த விஷால்! லேட்டஸ்ட் தகவல்
நடிகர் விஷால் தற்போது லத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். அதில் போலீசாக அவர் நடிக்கும் நிலையில் ஷூட்டிங்கில் ஸ்டண்ட் காட்சியில் நடிக்கும் போது அவருக்கு காயம் ஏற்பட்டது.
அதன் வீடியோவும் வெளியாகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து இருந்தது. இந்நிலையில் அந்த படம் ஆகஸ்ட் 12ம் தேதி ரிலீஸ் ஆகும் என முன்பு அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அது தள்ளிப்போய் இருக்கிறது.
லத்தி படம் செப்டம்பர் 15ம் தேதி ரிலீஸ் ஆக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இருப்பினும் இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு வரவில்லை.

அதே தேதியில் தான் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படம் ரிலீஸ் ஆக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சிம்பு - விஷால் மோதினால் ஜெயிக்கப்போவது யார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.