விஷால் - சாய் தன்ஷிகாவுக்கு இன்று நிச்சயதார்த்தம்.. எங்கு நடக்கிறது தெரியுமா
விஷால் - சாய் தன்ஷிகா
முன்னணி நடிகரான விஷால் கடந்த சில மாதங்களுக்கு முன், தான் நடிகை சாய் தன்ஷிகாவை காதலிப்பதாக அறிவித்தார்.
படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் இருவரும் கலந்துகொண்டு பத்திரிக்கையாளர்கள் முன் தங்களது திருமணத்தை அறிவித்தனர்.
நடிகர் சங்கம் கட்டிடம் வேலை முழுமையாக முடித்தபின், ஆகஸ்ட் 29ம் தேதி தனது பிறந்தநாள் அன்று தங்கள் திருமணம் என கூறியிருந்தனர். ஆனால், ஆகஸ்ட் 29ம் தேதி திருமணம் இல்லை, வேறொரு நல்ல செய்தி சொல்கிறேன என விஷால் தெரிவித்தார்.
நிச்சயதார்த்தம்
இந்த நிலையில், இன்று விஷால் சாய் தன்ஷிகா ஜோடிக்கு நிச்சயதார்த்தம். நடிகர் விஷாலின் பிறந்தநாளான இன்று ஆகஸ்ட் 29ம் தேதி அண்ணா நகரில் உள்ள அவரது இல்லத்தில், நிச்சயதார்த்தம் நடக்கிறது. ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.