பிரபல நடிகையை திருமணம் செய்யப்போகும் விஷால்.. யார் அந்த நடிகை தெரியுமா?
விஷால் திருமணம்
நடிகர் விஷால் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தனக்கு இன்னும் சில மாதங்களில் திருமணம் நடக்கவிருப்பதாக தெரிவித்தார். ஆனால், பெண் யார் என்று அவர் கூறவில்லை.
இந்த நிலையில், விஷால் திருமணம் செய்யப்போகும் பெண் பிரபல நடிகை சாய் தன்ஷிகா என இன்று காலை முதல் தகவல் பரவி வருகிறது. கபாலி, பேராண்மை, அரவான், பரதேசி போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சாய் தன்ஷிகா.
விஷால் - சாய் தன்ஷிகா
நடிகர் விஷாலும், நடிகை சாய் தன்ஷிகாவும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருகிறார்களாம். நட்பாக இவர்களுடைய உறவு துவங்கி, பின் காதலாக மாறியுள்ளது என தகவல் தெரிவிகின்றனர்.
வருகிற ஆகஸ்ட் மாதம் நடிகர் சங்க கட்டிடம் திறந்தவுடன், அதே மாத இறுதி அல்லது செப்டம்பரில் இருவருக்கும் திருமணம் நடைபெறும் என சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. இன்று மாலை நடிகை சாய் தன்ஷிகா நடித்துள்ள யோகிடா என்கிற படத்தின் விழா நடக்கவுள்ளது.
இதில் சிறப்பு விருந்தினராக விஷால் கலந்துகொள்ளப்போகிறாராம். இந்த விழாவில் இருவரும் தங்கள் காதல் மற்றும் திருமணம் குறித்து அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.