விஜயகாந்த் சமாதி முன் மன்னிப்பு கேட்ட விஷால்.. நடிகர் சங்கத்திற்கு விஜயகாந்த் பெயர் வைக்கப்படுமா
விஜயகாந்த் மறைவு
விஜயகாந்தின் மறைவு பெரும் துயரத்தை தமிழக மக்களுக்கு கொடுத்தது. அவருடைய உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த திரையுலக பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் வந்தனர்.
அரசு மரியாதையுடன் விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதன்பின் திரையுலகை சேர்ந்த பலரும் அவருடைய சமாதிக்கு வந்து தங்களுடைய அஞ்சலியை செலுத்தி வருகிறார்கள்.
சூர்யா, ஜெயம் ரவி, அருண் விஜய் உள்ளிட்டோரை தொடர்ந்து தற்போது நடிகர் சங்கத்தின் பொது செயலாளர் விஷால் தனது நண்பரும், நடிகருமான ஆர்யாவுடன் இணைந்து வந்து விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
கேள்விகளுக்கு விஷால் பதில்
இதன்பின் பத்திரிகையாளர்களை சந்தித்த அவரிடம் விஜயகாந்திற்கு ஏன் நடிகர் சங்கம் முறையாக அஞ்சலி செலுத்தவில்லை என கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த விஷால் 'என்னால் இங்கு வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. என்ன செய்வது என்று கூட தெரியாமல் இருந்தேன். என்ன மன்னிச்சுடு சாமி என்ற வார்த்தையை தவிர வேறு என்ன நான் கேட்பது' என கூறினார்.
இதன்பின் நடிகர் சங்கம் கட்டிடத்திற்கு விஜயகாந்த் பெயரை வைக்க வேண்டும் என மக்கள் உட்பட பல பிரபலங்களின் கருத்து குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதில் கொடுத்த விஷால் 'கண்டிப்பாக நடிகர் சங்கத்திற்கு விஜயகாந்த் அண்ணனின் பெயர் வைக்கப்படும். விஜயகாந்த் பெயர் வைக்கலாம் என்றால் யாரும் வேண்டாம் என சொல்லப்போவது இல்லை. இதில் எந்த ஒரு கருத்து வேறுபாடும் வராத' என கூறினார் விஷால்.
மேலும் வருகிற 19ஆம் தேதி நடிகர் சங்கம் சார்பில் விஜயகாந்திற்கு அஞ்சலி கூட்டம் நடைபெறும் என்றும் கூறியுள்ளார்.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
