வீட்டுக்குள் புகுந்த மழைநீர்.. கொந்தளித்த நடிகர் விஷால்! மழைநீர் வடிகால்னு ஒன்னு பண்ணீங்களே எங்க போச்சு..

By Parthiban.A Dec 04, 2023 03:00 PM GMT
Report

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் வரலாறு காணாத மழை பொழிந்து வருகிறது. அதனால் தண்ணீர் அனைத்து இடங்களிலும் பல ஆதி உயரத்திற்கு தேங்கி இருக்கிறது.

பல இடங்களில் வீடுகளுக்கு உள்ளும் வெள்ள நீர் புகுந்துவிட்டதால், மக்கள் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.

வீட்டுக்குள் புகுந்த மழைநீர்.. கொந்தளித்த நடிகர் விஷால்! மழைநீர் வடிகால்னு ஒன்னு பண்ணீங்களே எங்க போச்சு.. | Vishal Slam Dmk Govt For Floods In Chennai

விஷால் கேள்வி

இந்நிலையில் தற்போது நடிகர் விஷால் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். 'மழை நீர் வடிகால் என ஒரு ப்ராஜெக்ட் ஆரம்பிச்சு முடிசீங்களே. அது சென்னைக்கு தானா இல்லை சிங்கப்பூருக்கு செஞ்சீங்களா' என கேட்டிருக்கிறார். 

'நான் அண்ணா நகரில் தங்கி கொண்டிருக்கிறேன், இங்கேயே வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து இருக்கிறது. மற்ற இடங்களில் நிலைமை எப்படி இருக்கும்.' 

'2015,ல் வெள்ளம் வந்த போது மக்கள் எல்லோருக்கும் உதவினோம், ஆனால் தற்போது 8 வருடங்கள் கழித்து அதை விட மோசமான நிலை தான் வந்திருக்கிறது. மக்கள் பிரதிநிதிகளான எம்எல்ஏக்கள் வெளியில் வந்து மக்களுக்கு உதவ வேண்டும் என விஷால் கேட்டிருக்கிறார்.  

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US