5 லட்சம் பணப்பெட்டியை தூக்கிய முக்கிய போட்டியாளர்.. ஆனால்
பிக் பாஸ் பணப்பெட்டி
பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் பணப்பெட்டியை வைத்து அனைவருக்கும் ஷாக் கொடுக்கப்பட்டது. பணப்பெட்டியை எடுத்துவிட்டு குறிப்பிட்ட நேரத்திற்குள் வீட்டிற்குள்ளே வந்துவிட்டால், போட்டியை தொடரலாம்.
ஆனால், அப்படி வரவில்லை என்றால் போட்டியிலிருந்து வெளியேற்றப்படுவார் என அறிவிக்கப்பட்டது. முதலில் சென்ற முத்து ரூ. 50,000 கைப்பற்றினார். பின் ராயன் மற்றும் பவித்ரா ஆகியோர் ரூ. 2 லட்சத்தை எடுத்துள்ளனர்.
ரூ. 5 லட்சம்
இந்த நிலையில், ரூ. 5 லட்சம் போட்டியை எடுக்க விஷால் சென்ற நிலையில், வெற்றிகரமாக அவரும் போட்டியுடன் வீட்டிற்குள் வந்துள்ளார். சௌந்தர்யாவும் இதற்கான முயற்சியை எடுத்த நிலையில், பணப்பெட்டியை எடுக்க முடியாமல், அவர் வீட்டிற்குள் வந்து போட்டியை தொடர்ந்துள்ளார்.
ஆனால், இந்த முயற்சியில் பணப்பெட்டியை எடுத்துவிட்டு வீட்டிற்குள் வர முயன்ற ஜாக்குலின் காலதாமதம் ஆனதால், பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். இவருடைய எலிமினேஷன் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.