விஜய்
நடிகர் விஜய் தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருக்கும் நிலையில் விரைவில் அரசியல் கட்சி தொடங்க இருக்கிறார். அரசியலில் குதித்தால் நான் சினிமாவில் நிச்சயம் நடிக்கமாட்டேன் என விஜய்யே அவரது ரசிகர்களிடம் கூறி இருக்கிறார்.
மேலும் அரசியல் கட்சிக்கான முதற்கட்ட பணிகளை தற்போது விஜய் மக்கள் இயக்கம் செய்து வருகிறது.

விஷாலும் வருகிறாரா?
நடிகர் விஷால் ஏற்கனவே அரசியலில் அதிகம் ஆர்வம் கொண்டவர் தான். அவர் சில வருடங்களுக்கு முன்பு RK நகர் இடைத்தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்தார், ஆனால் அந்த மனு நிராகரிக்கப்பட்டது. அதற்கு பிறகு விஷால் சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.
விஷால் தற்போது நடித்து வரும் மார்க் ஆண்டனி படத்தின் குழுவினர் சமீபத்தில் ஒரு கல்லூரியில் மாணவர்கள் உடன் உரையாடினார். அப்போது விஜய்யின் ரசிகர் என சொல்லும் விஷாலும் அவர் உடன் அரசியலுக்கு வருவாரா என கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.
"அதை கடவுள் தான் நிர்ணயிக்கணும். எல்லோரும் ஏற்கனவே அரசியல்வாதி தான். பசி என்று வந்தவருக்கு 50 கொடுத்தாலே அவரும் அரசியல்வாதி தான்" என விஷால் கூறி இருக்கிறார்.

சமந்தா முடியை வெட்டி ஆளே மாறிவிட்டாரே! டாம் பாய் லுக் பார்த்து அசந்த ரசிகர்கள்