இப்படி இருந்தா வேலைக்கு ஆகாது, அதில் இருந்து வெளியே வரணும்.. சௌந்தர்யா குறித்து முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர்
பிக்பாஸ் 8
பிக்பாஸ், தமிழ் சின்னத்திரையில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் ஒரு நிகழ்ச்சி.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. கடந்த அக்டோபர் 6ம் தேதி பிக்பாஸ் 8வது சீசன் படு பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் இருந்து ரவீந்தர் முதல் வாரத்தில் எலிமினேட் ஆக அடுத்த வாரம் அர்னவ் எலிமினேட் ஆனார்.
விஷ்ணு பேச்சு
தற்போது பிக்பாஸ் 8வது சீசனில் கலந்துகொண்டுள்ள சௌந்தர்யா குறித்து 7வது சீசனின் பிக்பாஸ் போட்டியாளர் விஷ்ணு பேசியுள்ளார்.
அப்படி இல்லாமல் இருந்ததால் தான் எனது வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது.. தனது சொந்த வாழ்க்கை குறித்து சமந்தா
அதில் அவர், நான் நல்லா விளையாடுவேன், ஆனால் எனக்கு வாய்ப்பு வர மாட்டேங்குது என்ற எண்ணத்தில் சௌந்தர்யா இருக்காங்க. இந்த நிகழ்ச்சியை பொறுத்தவரை இப்படி உட்கார்ந்திருந்தா வேலைக்கு ஆகாது.
வாய்ப்பை நாம் உருவாக்கணும் அல்லது அது வேறு யாருக்காவது போகுதுன்னா தட்டிப் பறிக்கணும். எனக்குத் தெரிஞ்சு இவங்க ஒரு கம்ஃபர்ட் சோனில் இருக்காங்க, அதை விட்டு வெளியே வரணும் என பேசியுள்ளார்.