சௌந்தர்யா எனக்கு தோழி தான், ஆனால் அவர்.. பிக்பாஸில் நடந்தது குறித்து விஷ்ணு
சௌந்தர்யா
பிக்பாஸ் வரலாற்றில் எல்லா சீசன்களிலும் காதல் கதைகள் வந்துவிடும்.
ஆனால் இந்த சீசனில் பெரிதாக சொல்லும் அளவிற்கு எதுவும் கைகூடவில்லை. மாறாக காதல் விளையாட்டு நடந்ததாக தான் பேசப்படுகிறது, அந்த பிரச்சனை தான் இப்போது வீட்டிற்குள் வந்தவர்களால் பேசப்படுகிறது.
என்னை கல்யாணம் செய்வாயா என்ற அழகிய தருணம் வந்தது.
விஷ்ணு ஓபன் டாக்
அதாவது சௌந்தர்யாவை ஒரு தோழினாக பார்க்க சென்றார் விஷ்ணு. அப்போது திடீரென யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் சௌந்தர்யா, விஷ்ணுவிடம் தனது காதலை வெளிப்படுத்தினார், அந்த தருணம் எல்லோராலும் கொண்டாடப்பட்டது.
இதுகுறித்து விஷ்ணு கூறுகையில், சௌந்தர்யா நண்பனாக தான் வீட்டிற்குள் சென்றேன்.
அதற்கு மேல் அங்கு நடந்தது எல்லாம் எதிர்ப்பாராதது, வெளியில் சிலர் இதெல்லாம் ஸ்கிரிப்ட் என்பார்கள். நாங்கள் காதலிக்கிறோம், இப்போது தான் வெளிப்படையாக கூறியுள்ளோம்.
அதனால் கொஞ்ச நாள் காதலர்களாக வாழ்க்கையை என்ஜாய் செய்துவிட்டு சீக்கிரமே திருமணம் செய்துகொள்வோம் என கூறியுள்ளார்.