எனக்கு பிடித்த நடிகை இவர் தான்.. ஆர்யன் பட விழாவில் நடிகர் விஷ்ணு சொன்ன ரகசியம்!
விஷ்ணு விஷால்
வெண்ணிலா கபடிகுழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால்.
முதல் படமே அவருக்கு நல்ல வெற்றியை கொடுக்க தொடர்ந்து ஜீவா, இன்று நேற்று நாளை, முண்டாசுப்பட்டி, ராட்சசன், கட்டா குஸ்தி என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வந்தார்.
விஷ்ணு விஷால் நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் என்ற படத்தில் நடித்தார்.
ஆனால் இந்த படம் சரியாக ஓடவில்லை. இவர் கைவசம் தற்போது கட்டா குஸ்தி படத்தின் 2ம் பாகம் உள்ளது. தற்போது இவர் நடிப்பில் ஆர்யன் படம் வெளியாகி உள்ளது.

ஓபன் டாக்!
இந்நிலையில், விஷ்ணு பேசிய விஷயம் இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், " நான் இதுவரை நடித்த கதாநாயகிகளில் எனக்கு பிடித்த கதாநாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத். அவருடன் நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது. இதுவரை மக்கள் எனக்கு கொடுத்த அன்பு மிகவும் பெரியது.
3 வருடங்களுக்கு பின் நான் நாயகனாக நடித்த படம் வெளியாக உள்ளது. இதற்கு ரசிகர்கள் கொடுத்த அன்பு இந்த படத்தை சிறந்த படமாக மாற்றும்" என்று தெரிவித்துள்ளார்.
