என் படங்களுக்காக யாரும் காத்திருக்கவில்லை, நட்சத்திரமாகக் கருதவில்லை.. விஷ்ணு விஷால் ஆவேசம்!
விஷ்ணு விஷால்
வெண்ணிலா கபடிகுழு படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால்.
முதல் படமே அவருக்கு நல்ல வெற்றியை கொடுக்க தொடர்ந்து ஜீவா, இன்று நேற்று நாளை, முண்டாசுப்பட்டி, ராட்சசன், கட்டா குஸ்தி என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வந்தார்.
விஷ்ணு விஷால் நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் என்ற படத்தில் நடித்தார். ஆனால் இந்த படம் சரியாக ஓடவில்லை. தற்போது கட்டா குஸ்தி படத்தின் 2ம் பாகத்திலும் நடிக்க உள்ளார்.
ஆவேசம்!
இந்நிலையில், பேட்டி ஒன்றில் விஷ்ணு பேசிய விஷயம் இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், " இந்த ஆண்டு எனக்கு மிகவும் பிடித்த ஆண்டாக உள்ளது. திரைப்படங்களில் மக்கள் அதிகம் எதிர்ப்பார்க்கும் ஒருவர் தான் நட்சத்திர நடிகர். என்னுடைய திரைப்படங்களுக்காக எத்தனை பேர் காத்திருக்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை.
என்னை ஒரு நட்சத்திரமாகக் கருதவில்லை. ஒரு நாள் நான் அந்த இடத்திற்கு வருவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. இதற்கு நீண்ட ஆண்டுகள் ஆகும், ஏனனில் நான் ஒரு வித்தியாசமான, வணிக ரீதியற்ற பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.