நான் செய்த தவறுக்கு எனது மகனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும- வருத்தப்பட்ட விஷ்ணு விஷால்
நடிகர் விஷ்ணு விஷால்
விஷ்ணு விஷால் வெண்ணிலா கபடிகுழு, நீர்ப்பறவை போன்ற திரைப்படங்களில் நாயகனாக நடித்து தமிழ் சினிமாவில் வெற்றி நாயகனாக இருப்பவர் நடிகர் விஷ்ணு விஷால்.
ஒரு கிரிக்கெட் வீரராக இருந்த நடிகர் காலில் காயம் ஏற்பட அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது. பின் சினிமாவில் நடிக்க ஆசை வர இப்போது நிறைய வெற்றிப்படங்களில் நடித்து சாதனை செய்து வருகிறார்.
திருமணம், விவாகரத்து
இவர் 2010ம் ஆண்டு ரஜினி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் ஒரு மகனும் இருந்தார், ஆனால் இடையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக விவாகரத்து பெற்றனர்.
பின் ஜுவாலா கட்டா என்பவரை மறுமணம் செய்த விஷ்ணு விஷால் தற்போது படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
அண்மையில் ஒரு பேட்டியில், மன்னிப்பு கேட்க வேண்டும் என்றால் யாரிடம் கேட்பீர்கள் என கேட்டதற்கு அவர், வருங்காலத்தில் எனது மகனிடம் மன்னிப்பு கேட்பேன், காரணம் அவனது அம்மா-அப்பா ஒன்றாக இல்லை, அதனால் கேட்பேன் என கூறியுள்ளார்.
நடிகை சூர்யா-ஜோதிகாவின் மகள் தியா நடனம் ஆடும் இந்த வீடியோவை பார்த்துள்ளீர்களா?