ஓமைக்ரான் பாதிப்பு.. 10 நாள் படாத பாடு பட்ட விஷ்ணு விஷால்

Corona Vishnu Vishal Omicron
By Parthiban.A Jan 19, 2022 07:00 AM GMT
Report

நடிகர் விஷ்ணு விஷால் கோலிவுட்டில் முக்கிய நடிகர்களில் ஒருவர். அவர் பிஸியான நடிகர் மற்றும் தயாரிப்பாளராக வலம்வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் விஷ்ணு விஷாலுக்கு சமீபத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தது.

கொரோனா பாசிட்டிவ் ஆனதால் மிக அதிக உடல் வலி, மூக்கடைப்பு, தொண்டை வலி மற்றும் ஜுரம் ஏற்பட்டு இருப்பதாக அவர் ஜனவரி 9ம் தேதி பதிவிட்டு இருந்தார். இந்நிலையில் தற்போது 10 நாட்களை கழித்து தற்போது கொரோனாவில் இருந்து மீண்டிருப்பதாக ட்விட்டரில் தெரிவித்து உள்ளார் அவர்.

தனக்கு வந்திருந்தது ஓமைக்ரான் பாதிப்பு என அவர் குறிப்பிட்டு இருக்கிறார். ஜீன் டெஸ்ட் எடுத்ததில் இது தெரியவந்தது எனவும் கூறி இருக்கிறார். பாதிப்பு மிக அதிகம் இருந்தது எனவும், கடந்த 10 நாட்களாக படாத பாடு பட்டதாகவும் தெரிவித்து உள்ளார்.

தற்போதும் உடல் சோர்வுடன் தான் இருக்கிறேன் எனவும் விரைவில் பழைய நிலைக்கு திரும்புவேன் எனவும் அவர் தெரிவித்து உள்ளார்.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US