அந்த போட்டோ எடுத்ததே மனைவி தான்.. விஷ்ணு விஷாலை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
இத்தனை நாள் நடிகைகள் தான் சமூக வலைத்தளங்களில் மக்கள் கவனம் ஈர்ப்பதற்காக கிளாமராக போட்டோஷூட் எடுத்து வெளியிட்டு வந்தனர். ஆனால் தற்போது நடிகர்களே இந்த ட்ரெண்டுக்கு நுழைய தொடங்கி இருக்கின்றனர்.
விஜய் தேவரகொண்டா படத்தின் போஸ்டருக்கு ஆடையில்லாமல் போஸ் கொடுத்து இருந்தார். அதனை தொடர்ந்து சில தினங்களுக்கு முன் ஹிந்தி நடிகர் ரன்வீர் ஆடை இல்லாமல் போட்டோஷூட் நடத்தி இருந்தார்.

அந்த ட்ரெண்டை பின்பற்றி தற்போது தமிழ் நடிகர் விஷ்ணு விஷால் ஆடைஇல்லாமல் வெறும் பெட்ஷீட் உடன் மட்டும் போட்டோக்கள் எடுத்து வெளியிட்டு இருக்கிறார்.
அந்த போட்டோக்களை எடுத்தது தன் மனைவி ஜுவாலா கட்டா தான் என்றும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் அவரை வருத்தெடுத்து வருகிறார்கள்.