திருமணத்திற்கு 1 மாதம் முன் தெரியவந்த அதிர்ச்சி விஷயம்.. முதல் மனைவி பற்றி விஷ்ணு விஷால் எமோஷ்னல்
நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் அவரது இரண்டாவது மனைவி ஜுவாலா கட்டா ஆகியோருக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. அவருக்கு மிரா என பெயர்சூட்டி இருந்தனர்.
ஹிந்தி நடிகர் அமீர் கான் தான் குழந்தைக்கு பெயர் சூட்டினார். ஏற்கனவே விஷ்ணு விஷாலுக்கு முதல் மனைவி ரஜினி நடராஜ் உடன் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது என்பது குறிப்பித்தக்கது.
எமோஷ்னல் பேட்டி
சமீபத்தில் ஒரு பேட்டியில் தனது முதல் மனைவி ரஜினி பற்றி விஷ்ணு விஷால் எமோஷ்னலாக பேசி இருக்கிறார். "நான்கு ஆண்டுகள் காதலித்து அதன் பிறகு தான் திருமணம் செய்து கொண்டோம். திருமணத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பு தான் அவருக்கு கேன்சர் இருப்பது தெரியவந்தது."
"ஆனாலும் கடைசிவரை ஒன்றாக இருக்க வேண்டும் என்று அவரை திருமணம் செய்துகொண்டேன். திருமணத்திற்கு பிறகு பல ஆண்டுகள் அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். அதே காலகட்டத்தில் நான் படங்களில் அதிகம் கவனம் செலுத்தினேன்."
"அதனால் எனக்கு அவர் மீது அக்கறை இல்லை என நினைத்துக்கொண்டார். சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் வந்தது. விவாகரத்து முடிவை அவர் தான் எடுத்தார், நான் அல்ல" என விஷ்ணு விஷால் கூறி இருக்கிறார்.



ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan
