விஷ்ணு விஷாலின் FIR படத்திற்கு தெலுங்கானாவில் எதிர்ப்பு
விஷ்ணு விஷால் ஹீரோவாக நடித்து இருக்கும் எப்ஐஆர் படம் நேற்று தியேட்டர்களில் வெளியாகி நல்ல வரவேற்ப்பு பெற்று வருகிறது. இருப்பினும் அந்த படத்திற்கு மலேசியா, குவைத் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளில் வெளியிட தடை செய்யப்பட்டு இருக்கிறது. அந்த நாடுகளின் சென்சார் போர்டு அனுமதி கிடைக்காததால் எப்ஐஆர் அங்கு வெளியாகவில்லை.
இந்நிலையில் தற்போது எப்ஐஆர் படத்திற்கு தெலுங்கானாவில் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. All India Majlis-e-Ittehadul Muslimeen (AIMIM) கட்சியை சேர்ந்த எம்எல்ஏ-க்கள் Cinematography மினிஸ்டர் தலசனி ஸ்ரீனிவாஸ் யாதவ்வை சந்தித்து எப்ஐஆர் படம் பற்றி புகார் அளித்து இருக்கின்றனர்.
இந்த படத்தின் போஸ்டரில் Shahadah என்பது இடம்பெற்று இருக்கிறது. அது இஸ்லாமியர்களின் சென்டிமென்டை புண்படுத்தும் வகையில் இருக்கிறது என குறிப்பிட்டு இருக்கின்றனர். அதனால் அதை நீக்க Telangana Cinema (Regulation) Act, 1955படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு இருக்கின்றனர்.