தனது புதிய காதலியுடன் தீவிற்கு சுற்றுலா சென்றுள்ள விஷ்ணு விஷால்..! ஜோடியாக அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம்..

Actor Vishnu Vishal On a holiday with his lover
By Balakumar Feb 25, 2021 12:41 PM GMT
Report

நடிகர் விஷ்ணு விஷால் தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகராக விளங்குபவர், இவர் தொடர்ந்து பல நல்ல திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

மேலும் தற்போது FIR, மோகன்தாஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். பிரபு சாலமன் இயக்கத்தில் இவர் நடித்துள்ள காடன் திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

கடந்த 2011 ஆம் ஆண்டு ரஜினி நட்ராஜ் என்பவரை திருமணம் செய்துகொண்ட விஷ்ணு விஷால் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2018 ஆம் ஆண்டு விவாகரத்து ஆனது.

மேலும் விவாகரத்துக்குப் பின் பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை விஷ்ணு விஷால் காதலித்து வருவதாக கூறப்படுவது போலவே அவர்களின் புகைப்படங்களும் வெளியாகி வருகிறது.

அந்த வகையில் தற்போது விஷ்ணு விஷால் மற்றும் ஜுவாலா கட்டா இருவரும் மாலத்தீவிற்கு சுற்றுலா சென்றுள்ளனர். மேலும் அங்கு அவர்கள் ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார் விஷ்ணு.  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US