என்னிடம் விவாகரத்து கேட்டதே அவள் தான்- முதல் மனைவியுடன் விவாகரத்து குறித்து விஷ்ணு விஷால்
விஷ்ணு விஷால்
மக்கள் எல்லோருக்கும் தனது கனவை நோக்கி பயணிக்க வாய்ப்புகள் கிடைப்பதில்லை, இதனால் பலரும் கிடைக்கும் வழியில் தனது எதிர்காலத்திற்காக உழைத்து வருகிறார்கள்.
அப்படி கிரிக்கெட் வீரராக மாற வேண்டும் என நினைத்தவர் விஷ்ணு விஷால், சில காரணங்களால் அவரது டிராக் மாற இப்போது சிறந்த நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார்.
கடந்த 2009ம் ஆண்டு சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான வெண்ணிலா கபடி குழு படத்தில் நடிக்க தொடங்கியவர் அடுத்தடுத்து பலே பாண்டியா, துரோகி, குள்ளநரி கூட்டம், நீர்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை, ராட்சசன் என தொடர்ந்து நிறைய வெற்றிப்படங்கள் கொடுத்தார்.
தற்போது ரஜினிகாந்த் சிறப்பு வேடத்தில் நடித்திருக்கும் லால் சலாம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
முதல் மனைவி
லால் சலாம் பட புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் தனது முதல் மனைவி ரஜினி குறித்து விஷ்ணு விஷால் பேசியுள்ளார். அதில் அவர், முன்னாள் மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற வேண்டும் என்கிற முடிவை நான் எடுக்கவில்லை.
நீதிமன்றத்தில் கேட்கும்போது கூட அவர்தான் என்னை விட்டு பிரிந்து செல்ல வேண்டும் என கூறினார். நான் அமைதியாக தான் இருந்தேன் என தெரிவித்துள்ளார்.

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
