சிம்புவின் இடத்தை பிடித்த விஷ்ணு விஷால்.. முழு விவரம்
நடிகர் சிம்பு வேல்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து இருந்தார். அப்போது கொரோனா குமார் என்ற படத்திற்காகவும் ஒப்பந்தம் போடப்பட்டு சிம்புவுக்கு ஒரு பெரிய தொகை அட்வான்ஸாக வழங்கப்பட்டது.
ஆனால் சிம்பு அந்த படத்தில் நடிக்கவும் வரவில்லை, அட்வான்ஸ் தொகையையும் திருப்பி தரவில்லை என வேல்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
சிம்புவுக்கு பதில் இவர்
இந்நிலையில் சிம்புவை அந்த படத்தில் இருந்து நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக விஷ்ணு விஷாலை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள் என தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா பட புகழ் இயக்குனர் கோகுல் தான் இந்த படத்தை இயக்குகிறார். அவர் இயக்கத்தில் சமீபத்தில் சிங்கப்பூர் சலூன் படம் ரிலீஸ் ஆகி இருந்தது. அந்த படத்தை தயாரித்தும் வேல்ஸ் நிறுவனம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
