திடீரென சமூக வலைத்தளங்களில் இருந்து விலகிய விஷ்ணு விஷால்! என்ன ஆனது?
நடிகர் விஷ்ணு விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருந்து வருகிறார். கடந்த வருடம் அவர் நடித்த ஆர்யன் படம் ரிலீஸ் ஆகி நல்ல விமர்சனதத்தை பெற்று இருந்தது.
மேலும் கடந்த வருடம் விஷ்ணு விஷால் மற்றும் அவர் இரண்டாவது மனைவி ஜுவாலா கட்டா ஆகியோருக்கு பெண் குழந்தை பிறந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைதளங்களில் இருந்து..
இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் திடீரென சமூக வலைதளங்களில் இருந்து பிரேக் எடுக்க போகிறேன் என அறிவித்து இருக்கிறார்.
அவர் தற்போது நடித்து வரும் இரண்டு வானம், கட்டா குஸ்தி 2 ஆகிய படங்களில் கவனம் செலுத்த இருப்பதால் இந்த முடிவை அவர் எடுத்து இருக்கிறாராம்.
விரைவில் பட அப்டேட்களுடன் வருகிறேன் எனவும் அவர் கூறியுள்ளார்.
Taking a small break from social media...
— VISHNU VISHAL - VV (@TheVishnuVishal) April 3, 2026
Will be back soon with movie updates...#IranduVaanam#GattaKusthi2