விஷ்ணு விஷாலுக்கு கொரோனா! பதறிய தெலுங்கு சினிமா ரசிகர்கள்.. காரணம் இதுதான்
சினிமா துறையினர் பலரும் தற்போது கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். வடிவேலு தொடங்கி த்ரிஷா வரை ஒரு பெரிய பட்டியலே வரும். தற்போது நடிகர் விஷ்ணு விஷாலுக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆனதாக அறிவித்து இருக்கிறார்.
விஷ்ணு தற்போது ட்விட்டரில் பதிவிட்டு இருப்பதாவது.. "2022ஐ பாசிட்டிவ் உடன் தொடங்குகிறேன். ஆம் நான் கோவிட் பாசிட்டிவ். கடந்த ஒரு வாரத்தில் என்னை சந்தித்தவர்கள் பார்த்துக்கொள்ளுங்கள். மிக அதிக அளவு உடல் வலி, மூக்கடைப்பு, தொண்டை வலி, ஜுரம் இருக்கிறது. மீண்டு வர முயற்சிக்கிறேன்" என விஷ்ணு தெரிவித்து இருக்கிறார்.
2022
— VISHNU VISHAL - V V (@TheVishnuVishal) January 9, 2022
Starting wid a +IVE result..?
Guys ...
Yes im covid +ive...
Anyone who came in contact with me in the last 1 week please take care..
Horrific body pains and nose block,itchy throat n also mild fever..
Looking forward to bounce back soon?
விஷ்ணுவுக்கு கொரோனா என்பது அறிந்து தெலுங்கு ஹீரோ ரவிதேஜா ரசிகர்கள் ஷாக் ஆகி இருக்கின்றனர். காரணம் சில தினங்களுக்கு முன்பு அவர் ரவி தேஜா உடன் இருக்கும் போட்டோ வெளியிட்டு இருவரும் சேர்ந்து பணியாற்ற இருப்பதாக கூறி இருந்தார்.
விஷ்ணு ரவிதேஜாவை சந்தித்ததால் அவருக்கும் கொரோனா வந்திருக்கும் என ரசிகர்கள் ஷாக் ஆனார்கள். ஆனால் அந்த போட்டோ பழைய ஒன்று என்று விஷ்ணு விளக்கம் கொடுத்து இருக்கிறார்.
Old pic..
— VISHNU VISHAL - V V (@TheVishnuVishal) January 9, 2022
So relax :) https://t.co/QtUi1Y9pgt