நீங்க சூர்யாவா, ரஜினியா? போன் எடுக்க முடியாதா? - திமிராக பேசிய இயக்குனருக்கு விஷ்ணு விஷால் பதிலடி
நடிகர் விஷ்ணு விஷால் கோலிவுட்டில் முக்கிய நடிகர்களில் ஒருவர். அவர் நடிப்பில் அடுத்து கட்டா குஸ்தி 2 படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.
ஜூலை 3ம் தேதி ரிலீஸ் ஆகும் அந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக பல பேட்டிகளை விஷ்ணு விஷால் கொடுத்து வருகிறார். ஒரு பேட்டியில் தன்னிடம் ஒரு பிரபல இயக்குனர் திமிராக போனில் பேசியதாகும், அவருக்கு தான் உடனே பதிலடி கொடுத்ததாகவும் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

யார் அந்த இயக்குனர்?
"நீங்க என்ன சூர்யாவா, ரஜினியா, இல்ல கமல்ஹாசனா? ஏன் இரண்டு முறை போன் எடுக்கல.. என அந்த இயக்குனர் கேட்டார். எனக்கு சூர் என கோபம் ஏறியது.
உடனே நான் 'நீங்க மணிரத்னமா, சங்கரா இல்லை கௌதம் மேனனா?' என கேட்டுவிட்டேன்" என விஷ்ணு விஷால் தெரிவித்து இருக்கிறார்.
யார் அந்த இயக்குனர் என நெட்டிசன்கள் தற்போது விவாதம் செய்ய தொடங்கி இருக்கின்றனர்.
பிறந்தநாளில் முதல்வரை சிரிக்க வைத்த பிரேமலதா மற்றும் ஓபிஎஸ்... சட்டசபையில் நடந்தது என்ன? IBC Tamilnadu
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan