விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் 5 நாட்களில் தமிழ்நாட்டில் செய்துள்ள வசூல்..
சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் தமிழ்நாடு வசூல் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
விஸ்வநாத் & சன்ஸ்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு கடந்த வாரம் வெளியான திரைப்படம் விஸ்வநாத் & சன்ஸ்.

இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து முதல் முறையாக மமிதா பைஜூ நடித்துள்ளார். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன.

தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸ்
விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் உலகளவில் 5 நாட்களில் ரூ. 138 கோடி வசூல் செய்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் எவ்வளவு வசூலித்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படம் தமிழ்நாட்டில் 5 நாட்களில் ரூ. 34.5 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.