பாக்ஸ் ஆபிஸ்: 17 நாட்களில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. முழு விவரம்
முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் வெளிவந்த விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் 17 நாட்கள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
விஸ்வநாத் & சன்ஸ்
தென்னிந்திய சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருக்கும் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி வெளியான திரைப்படம் விஸ்வநாத் & சன்ஸ்.

இப்படத்தில் ஜோடியாக மமிதா பைஜூ நடித்துள்ளார். பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும், பாக்ஸ் ஆபிஸில் முதல் நாளில் இருந்தே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
பாக்ஸ் ஆபிஸ்
விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் வசூல் குறித்த விவரங்களை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பார்த்து வருகிறோம். அந்த வகையில், 17 நாட்களில் இப்படம் செய்துள்ள வசூல் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, 17 நாட்களில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் உலகளவில் ரூ. 210 கோடி வசூல் செய்துள்ளது. மேலும், தமிழ்நாட்டில் ரூ. 60 கோடி வசூலித்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.