பாக்ஸ் ஆபிஸ்: 6 நாட்களில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்
சூர்யா நடிப்பில் வெளிவந்த விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் 13 நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
விஸ்வநாத் & சன்ஸ்
தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் சூர்யா, இந்த ஆண்டு கருப்பு திரைப்படத்தின் மூலம் மாஸ் கம்பேக் கொடுத்தார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான திரைப்படம்தான் விஸ்வநாத் & சன்ஸ்.

இயக்குநர் வெங்கி அட்லூரி இப்படத்தை இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் இயக்கிய லக்கி பாஸ்கர் திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியடைந்தது. இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார், சுனில், ரவீனா டாண்டன், பவானி ஸ்ரீ என பலரும் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

கடந்த வாரம் திரைக்கு வந்த விஸ்வநாத் & சன்ஸ் தமிழ்நாட்டில் கலவையான விமர்சனங்களை சந்தித்தது. ஆனால், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் வெற்றியை படக்குழுவினர் இணைந்து கொண்டாடினார்கள்.
வசூல் விவரம்
ஒவ்வொரு புதிய திரைப்படம் வெளிவரும்போது, அதனுடைய வசூல் விவரங்களை நாம் பார்ப்போம். அந்த வகையில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் வசூல் குறித்தும் நாம் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பார்த்து வருகிறோம்.

இந்நிலையில், உலகளவில் 6 நாட்களில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் 6 நாட்களில் ரூ. 145 கோடி வசூலித்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.