பாக்ஸ் ஆபிஸ்: முதல் நாள் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்

By Karthick Raja Aug 15, 2026 03:00 AM GMT
Report

சூர்யா நடிப்பில் நேற்று வெளியான விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் முதல் நாள் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

விஸ்வநாத் & சன்ஸ்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் இந்த ஆண்டு கருப்பு திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியடைந்தது. சூர்யாவின் திரை வாழ்க்கையில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்கிற சாதனையும் படைத்தது.

பாக்ஸ் ஆபிஸ்: முதல் நாள் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் | Vishwanath And Sons First Day Worldwide Box Office

இப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து சூர்யா நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம்தான் விஸ்வநாத் & சன்ஸ். இப்படத்தை இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்க, சித்தாரா என்டர்டைன்மெண்ட்ஸ் தயாரித்துள்ளது.

அசத்தலான உடையில் ருக்மிணி வசந்த்.. அழகிய ஸ்டில்கள்

அசத்தலான உடையில் ருக்மிணி வசந்த்.. அழகிய ஸ்டில்கள்

இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடித்துள்ளார். மேலும், ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

பாக்ஸ் ஆபிஸ்: முதல் நாள் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் | Vishwanath And Sons First Day Worldwide Box Office

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால், கலவையான விமர்சனங்களையும் எதிர்கொண்டுள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்

இந்நிலையில், விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் முதல் நாள் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, முதல் நாள் இப்படம் உலகளவில் ரூ. 34 கோடி வசூல் செய்துள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்: முதல் நாள் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் | Vishwanath And Sons First Day Worldwide Box Office

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US