ஓடிடியில் சாதனை படைத்த விஸ்வநாத் & சன்ஸ் மற்றும் ஜனநாயகன்
Vishwanath & Sons and Jana Nayagan makes Record in OTT: சூர்யா நடித்த விஸ்வநாத் & சன்ஸ் மற்றும் விஜய் நடித்த ஜனநாயகன் ஆகிய இரு திரைப்படங்களும் ஓடிடியில் செய்துள்ள மாபெரும் சாதனை குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் நாம் விரிவாக பார்க்கலாம்.
VAS - ஜனநாயகன்
2026-ஆம் ஆண்டு விஜய் மற்றும் சூர்யா ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்கள் ஜனநாயகன் மற்றும் விஸ்வநாத் & சன்ஸ். பல தடைகளை தாண்டி கடந்த ஜூலை 23-ஆம் தேதி திரைக்கு வந்த ஜனநாயகன் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றாலும், பாக்ஸ் ஆபிஸில் சற்று தடுமாறியது.

அதேபோல் சூர்யா நடிப்பில் வெளிவந்த விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் தமிழ்நாட்டில் தோல்வியை தழுவினாலும், மற்ற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் வசூல் அள்ளி சாதனை படைத்தது.
ஓடிடி
திரையரங்குகளில் ஓடி முடித்து, விஸ்வநாத் & சன்ஸ் நெட்ப்ளிக்ஸ் ஓடிடியிலும், ஜனநாயகன் ஜீ5 ஓடிடியிலும் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றது. இதனால், ஓடிடியில் ஜனநாயகன் மற்றும் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படங்கள் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளன.

இந்த வருடம் தமிழ் சினிமாவில் இதுவரை ஓடிடியில் வெளிவந்த திரைப்படங்களிலேயே 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த முதல் இரண்டு திரைப்படங்கள் இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.