பாக்ஸ் ஆபிஸ்: 15 நாட்களில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்

By Karthick Raja Aug 22, 2026 03:06 AM GMT
Report

விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் 15 நாட்கள் வசூல் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.

வருங்கால முதலமைச்சர் என கத்திய ரசிகர்.. சிவகார்த்திகேயன் கொடுத்த ரியாக்ஷனை பாருங்க

வருங்கால முதலமைச்சர் என கத்திய ரசிகர்.. சிவகார்த்திகேயன் கொடுத்த ரியாக்ஷனை பாருங்க

விஸ்வநாத் & சன்ஸ்

சூர்யா நடிப்பில் ஒரு திரைப்படம் வெளியாகிறது என்றால் ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே மாபெரும் எதிர்பார்ப்பு இருக்கும். தங்களின் மனம் கவர்ந்த நாயகனை திரையில் கொண்டாட அனைவரும் ஆவலுடன் காத்திருப்பார்கள். அதுவும் கருப்பு என்கிற மாபெரும் வெற்றிக்கு பின் ஒரு திரைப்படம் வெளியாகிறது என்றால், அப்படத்தின் கொண்டாட்டம் எந்த அளவிற்கு இருக்கும் என்று சொல்லவே தேவையில்லை.

பாக்ஸ் ஆபிஸ்: 15 நாட்களில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல் | Vishwanath And Sons Movie 15 Days Box Office

அப்படி மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் ரசிகர்களால் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடப்படும் திரைப்படம்தான் விஸ்வநாத் & சன்ஸ். இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவான இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார், சுனில், ரவீனா டாண்டன் ஆகியோர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

பாக்ஸ் ஆபிஸ்

கடந்த வாரம் வெளியான இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் கூட, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் வெளிநாடுகளில் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்: 15 நாட்களில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல் | Vishwanath And Sons Movie 15 Days Box Office

இந்நிலையில், 15 நாட்களை வெற்றிகரமாக கடந்திருக்கும் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் உலகளவில் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 15 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 159 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூலிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US