Live Update: விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் எப்படி இருக்கிறது? ரசிகர்களின் விமர்சனம்

By Karthick Raja Aug 14, 2026 03:00 AM GMT
Report

இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள், படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து சமூக வலைத்தளத்தில் விமர்சனங்கள் தெரிவித்துள்ளனர். அதைப்பற்றி பார்க்கலாம் வாங்க.

எனக்கு அப்படி தோன்றினால் சினிமாவை விட்டு விலகிவிடுவேன்... அனிருத் அதிரடி பேட்டி

எனக்கு அப்படி தோன்றினால் சினிமாவை விட்டு விலகிவிடுவேன்... அனிருத் அதிரடி பேட்டி

விஸ்வநாத் & சன்ஸ்

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விஸ்வநாத் & சன்ஸ். இப்படத்தை இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார்; மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Live Update: விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் எப்படி இருக்கிறது? ரசிகர்களின் விமர்சனம் | Vishwanath And Sons Movie Fans Review

கருப்பு திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து வெளிவரவிருக்கும் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் மீது ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை வைத்துள்ளனர். மேலும், இப்படத்தின் பாடல்கள், டிரைலர் உள்ளிட்டவை இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை பலமடங்கு அதிகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்களின் விமர்சனம்

இந்நிலையில், இன்று வெளியாகியுள்ள விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள், தங்களது எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்ததா இல்லையா என்பது குறித்து விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

Live Update: விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் எப்படி இருக்கிறது? ரசிகர்களின் விமர்சனம் | Vishwanath And Sons Movie Fans Review

இதில், "படத்தின் முதல் பாதி சிறப்பு, ஆனால் இரண்டாம் பாதி பலவீனமாக உள்ளது. குடும்பத்துடன் பார்க்கக்கூடிய ஒரு பொழுதுபோக்குத் திரைப்படம். Okay-வான, மனதிற்கு இதமான குடும்ப பொழுதுபோக்குத் திரைப்படம். சூர்யா, மமிதா மற்றும் ராதிகா ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர். இப்படத்தின் மிகப்பெரிய பலம் வெங்கி அட்லூரியின் வசனங்கள்; படத்தின் இரண்டாம் பாதியில் இன்னும் சிறந்த திரைக்கதை அமைந்திருக்கலாம்" என விமர்சனங்களை தெரிவித்துள்ளனர்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US