விசித்திரன் திரைவிமர்சனம்
எம். பத்மகுமார் இயக்கத்தில் ஆர்.கே. சுரேஷ் நடிப்பில் இன்று வெளிவந்துள்ள திரைப்படம் விசித்திரன். திரில்லர் கிரீம் கதைக்களத்தில் உருவாகி வெளிவந்துள்ள இப்படம் எப்படி இருக்கிறது என்று வாங்க பார்க்கலாம்.
கதைக்களம்
காவல் துறையில் கான்ஸ்டபிளாக இருந்து வி ஆர் எஸ் பெற்றர்வர் கதாநாயகன் மாயன் { ஆர்.கே. சுரேஷ் }. பல பெரிய அதிகாரிகளால் கூட கண்டுபிடிக்கமுடியாத குற்றங்களை சர்வசாதாரணமாக கண்டிபிடித்துவிடும் அளவிற்க்கு திறமைகொண்ட ஆர்.கே.சுரேஷ், மதுவிற்கு அடிமையாகிவிடுகிறார்.
காதலியை விட்டு பிரிந்த துயரத்தில், மனைவியையும் ஏற்றுக்கொள்ள மனம் இல்லாமல் தவித்து வருகிறார். இப்படி போய்க்கொண்டிருக்க, ஆர்.கே.சுரேஷை விட்டு பிரிந்து சென்ற அவரது மனைவி தீடீரென ஒரு நாள் விபத்தில் சிக்கி உயிரிழக்கிறார். அனைவரும் இதை விபத்து என்று கூறி வர, ஆர்.கே.சுரேஷ் மட்டும் இது விபத்து அல்ல, இது திட்டமிட்ட கொலை என்று சந்தேகப்படுகிறார்.
இதன்பின், ஆர்.கே.சுரேஷ் தனது மனைவியை கொன்றது யார்? எதற்காக இப்படி செய்தார்கள்? என்று கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை..
படத்தை பற்றிய அலசல்
கதாநாயகன் ஆர்.கே.சுரேஷ் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இப்படத்தில் அவருடைய நடிப்பு தனித்து நிற்கிறது. ஆர்.கே.சுரேஷின் மனைவியாக நடித்துள்ள பூர்ணா தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை அழகாக செய்துள்ளார். கொஞ்ச நேரம் வந்தாலும், மனதில் நிற்கிறார் நடிகை மது ஷாலினி. மற்றபடி இளவரசு, பகவதி, மாரிமுத்து, ஜார்ஜ், என அனைவரும் தங்களது கதாபாத்திரத்தில் சிறந்து விளங்குகிறார்கள்.
மலையாளத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளிவந்த ஜோசப் படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த விசித்திரம். அப்படத்தை இயக்கிய அதே இயக்குனர் எம். பத்மகுமார் தான், இப்படத்தையும் இயக்கியுள்ளார். மருத்துவத்தில் நடக்கும் தவறுகளை தனது இயக்கத்தில் அழகாக எடுத்துக்காட்டியுள்ளார். திரைக்கதை படத்திற்கு பலம் சேர்க்கிறது.
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு கூடுதல் பலம். வெற்றிவேல் மஹேந்திரனின் ஒளிப்பதிவு சூப்பர். சதீஸ் சூர்யாவின் எடிட்டிங் சிறப்பு
க்ளாப்ஸ்
ஆர்.கே. சுரேஷ் நடிப்பு
இயக்கம், திரைக்கதை
பின்னணி இசை
பல்ப்ஸ்
மலையாள படத்தில் இருந்த ஒவ்வொரு காட்சியும் அப்படியே இருப்பது மட்டுமே படத்திற்கு சிறய மைனஸ்.
மொத்தத்தில் சிறந்த திரில்லர் கிரீம் படமாக அமைந்துள்ளது விசித்திரம்.