விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் தயாரிப்பாளருக்கு லாபம் மட்டுமே இத்தனை கோடிகளா
சூர்யா
சூர்யா நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நாளை பிரமாண்டமாக வெளிவரவுள்ள படம் விஸ்வநாதன் அண்ட் சன்ஸ். இப்படம் பேமிலி ட்ராமாவாக இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் சூர்யா நடிக்கிறார் என்பதற்காவே பெரிய வரவேற்பு உள்ளது, உலகம் முழுவதும் முன்பதிவு மட்டுமே ரூ 7 கோடிகளுக்கு மேல் ஆகியுள்ளது.
லாபம்
இந்த நிலையில் விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் பட்ஜெட் ரூ 130 கோடி என்றாலும் இதன் பிஸினஸ் 200 கோடிகளுக்கு மேல் நடக்க தயாரிப்பாளருக்கு தற்போது ரூ 80 கோடிகளுக்கு மேல் லாபம் இருக்கலாம் என பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் கணித்துள்ளனர். அதோடு சூர்யாவின் முந்தைய படமான கருப்பு சுமார் ரூ 100 கோடிகளுக்கு மேல் லாபம் கொடுத்த படம், அதனால் ரிலிஸின் பிறகு விஸ்வநாதன் அண்ட் சன்ஸும் ரூ 100 கோடி வரை லாபம் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை தொடர்ந்து தீபாவளிக்கு ஜீது மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படமும் வர கண்டிப்பாக இந்த ஆண்டு சூர்யாவின் ஆண்டு தான் என திரை வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.