அஜித் படத்தை நிராகரித்த முன்னணி பாலிவுட் ஹீரோக்கள்! ஷாக்கிங் அப்டேட்

Ajith Hindi remake Bollywood Viswasam
3 மாதங்கள் முன்

அஜித் சிறுத்தை சிவா கூட்டணியில் உருவான நான்காவது படம் விஸ்வாசம். அந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. அந்த படம் குடும்ப ரசிகர்கள் அதிகம் கவர்ந்தது தான் வசூல் சாதனைக்கு காரணம்.

விஸ்வாசம் படத்தின் ரீமேக் உரிமையை 4 கோடி ரூபாய்க்கு மனிஷ் ஷா என்பவர் பெற்று இருந்தார். ஹிடன்ஹி ரீமேக்கில் நடிக்க அஜய் தேவ்கானை அவர் முதலில் அணுக அவர் நடிக்க முடியாது என மறுத்துவிட்டாராம். அடுத்து அக்ஷய் குமாரிடம் செல்ல அதே பதில் தான் கிடைத்து இருக்கிறது. இந்த கதை ஹிந்தி ஆடியன்ஸுக்கு பிடிக்க வாய்ப்பில்லை என்று தான் டாப் ஹீரோக்கள் அதை நிராகரிக்கிறார்கள் என சொல்லப்படுகிறது.

மனிஷ் ஷா அதன்பின் ஏக்தா கபூர் உடன் கூட்டணி சேர்ந்து ரீமேக் செய்ய முயற்சித்து இருக்கிறார். ஆனால் அவரும் முடியாது என சொல்லிவிட்டாராம். இதனால் பெரிய ஹீரோ இல்லாமல் சின்ன நடிகரை வைத்து விஸ்வாசம் படம் உருவாகும் என தெரிகிறது.

தமிழில் தயாரித்த அதே நிறுவனத்துடன் கூட்டணி சேர்ந்து ஹிந்தியில் தயாரிக்கவும் முயற்சிகள் நடந்து வருகிறது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

+44 20 8133 8373
UK
+41 435 080 178
Switzerland
+1 647 694 1391
Canada
+33 182 880 284
France
+49 231 2240 1053
Germany
+1 678 389 9934
US
+61 291 881 626
Australia
lankasri@lankasri.com
Email US