Youtube-ல் மாபெரும் சாதனை படைத்த அஜித்தின் விஸ்வாசம்.. இது வேற லெவல் மாஸ்
சிறுத்தை சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக தல அஜித் நடித்து வெளியான திரைப்படம் விஸ்வாசம்.
இப்படத்தில் அஜித்துடன் இணைந்து நடிகை நயன்தாரா, விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், ஜெகபதி பாபு என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் வசூல் ரீதியாக ரூ. 187 கோடி வரை வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது.
மேலும், சிறந்த பாடலுக்கான தேசிய விருது கூட, இப்பாடலை இசையமைத்த இசையமைப்பாளர் டி. இமானுக்கு கிடைத்துள்ளது.
இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்று இருந்த, அடிச்சு தூக்கு பாடல் Youtube-ல் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.
இதனை அஜித்தின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.