மறைந்த நடிகர் விவேக்கின் நடிப்பில் வெளியாகவிருக்கும் படங்கள் - என்னென்ன தெரியுமா

vivek movies vijay sethupathi legend saravana
By Kathick Apr 19, 2021 04:45 PM GMT
Report

தமிழ் திரையுலகில் அனைவராலும் ரசிக்கப்பட்ட மாபெரும் நடிகர், விவேக் அவர்கள் சமீபத்தில் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.

இவர் நடிப்பில் கடைசியாக தாராள பிரபு என்ற திரைப்படம் வெளியானது. இதன்பின் தற்போது இந்த மண்ணை விட்டு நடிகர் விவேக் பிரிந்துள்ள நிலையில் அவர் நடிப்பில் உருவாகியுள்ள கடைசி 3 திரைப்படங்கள் என்னென்னவென்று பார்ப்போம்.

நடிகர் விஜய் சேதுபதியுடன் முதல்முறையாக விவேக் இணைந்து நடித்துள்ள படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’.

அதேபோல் லெஜண்ட் சரவணன் ஹீரோவாக அறிமுகமாகும் படத்திலும் அவருடன் முக்கிய நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இன்னும் பெயரிடப்படாத இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் உடன் இந்தியன் 2 திரைப்படத்திலும் விவேக் நடித்து வந்தார்.

அவரது காட்சிகள் ஏற்கெனவே படமாக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. அதேவேளையில் பல்வேறு காரணங்களால் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US