நடிகர் விவேக்கின் மரணம் குறித்து நடிகை நயன்தாரா வெளியிட்ட பதிவு, என்ன கூறியுள்ளார் பாருங்க

death post vivek nayanthara
By Jeeva Apr 18, 2021 01:45 PM GMT
Report

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக பலரையும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தவர் தான் நடிகர் விவேக், இவரை பலரும் சின்ன கலைவாணர் என்று தான் அழைப்பார்கள்.

கடந்த 20 வருட காலங்களாக தமிழ் சினிமாவை கலக்கி வந்த விவேக் ரஜினி, விஜய், அஜித், விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் நடித்து பலரின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

இந்நிலையில் திடீரென மாரடைப்பு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று அவர் மரணமடைந்தார், இதனால் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவே சோகத்திற்கு உள்ளாகியது.

 இதனிடையே தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா விவேக் மறைவு குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் " பல ஆண்டுகளாக அவருடன் பணிபுரிந்த அற்புதமான நினைவுகள் எப்போதும் என்னுடன் இருக்கும். குறிப்பாக 'விஸ்வாசம்' படம். மிக விரைவாக நம்மை விட்டுச் சென்று விட்டார். நம்பமுடியவில்லை. வாழ்க்கை எவ்வளவு கணிக்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது என்பதை இது காட்டுகிறது.

அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள். இந்த இழப்பைத் தாங்கும் வலிமையை அவர்களுக்கு கடவுள் கொடுக்க வேண்டும் என்று வேண்டுகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் விவேக்கின் மரணம் குறித்து நடிகை நயன்தாரா வெளியிட்ட பதிவு, என்ன கூறியுள்ளார் பாருங்க | Vivek Nayanthara Post About Death


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US