விவேக் எனும் மகா நடிகன், நல்ல மனிதன்

death vivek article
By Kathick Apr 17, 2021 11:50 AM GMT
Report

தமிழ் திரையுலகில் நகைச்சுவையை கூறி சிரிக்க வைப்பது மட்டுமல்லாமல், அனைவரையும் சிந்திக்கவும் வைத்தவர் நடிகர் விவேக்.

அதுமட்டுமல்லாமல் தொடர்ந்து சமூக கருத்துக்களை தனது நகைச்சுவையின் மூலம் தெரிவித்து வந்த நடிகர் விவேக் ரசிகர்களால் சின்ன கலைவாணர் என கொண்டாடவும்பட்டார்.

தமிழ் திரையுலகில் சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேல் சிறந்த நகைச்சுயால் மக்களின் மனதில் வாழ்ந்து வரும் விவேக்கின் வாழ்க்கை வரலாறை பற்றி இங்கு பார்ப்போம்.

பிறப்பு

1961 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் நாள், அங்கய்யா பாண்டியன், மணியம்மாள் ஆகியோருக்கு மகனாக கோவில்பட்டியில் பிறந்தவர் நடிகர் விவேக் என்கிற விவேகானந்தன். 

விவேக் எனும் மகா நடிகன், நல்ல மனிதன் | Vivek Sir Life Article

கல்வி மற்றும் தொடக்க வாழ்க்கை

தன்னுடைய பள்ளிப்படிப்பை மதுரையில் முடித்த விவேக் அவர்கள், பிறகு அதே ஊரில் இருக்கும் அமெரிக்கன் கல்லூரியில் வர்த்தக இளங்கலைத் துறையில் பி.காம் பட்டம் பெற்றார். அதே துறையில், எம்.காம் முதுகலைப் பட்டமும் பெற்ற அவர், சிறிது காலம், தொலைப்பேசி ஆபரேட்டராக மதுரையில் வேலைப்பார்த்து வந்தார். அதன் பிறகு, சென்னைக்கு வந்து சேர்ந்த அவர், டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் வெற்றிப் பெற்று, சென்னைத் தலைமை செயலகத்தில் ஜூனியர் உதவியாளராகப் பணியில் சேர்ந்தார். 

விவேக் எனும் மகா நடிகன், நல்ல மனிதன் | Vivek Sir Life Article

திரைப்படத்துறை

1987-ம் ஆண்டு, ‘மனதில் உறுதிவேண்டும்’ என்ற திரைப்படத்தின் மூலம், தமிழ் சினிமாத்துறையில் கால்பதித்தார் நடிகர் விவேக். அந்த திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார். அதன் பின், 1989 ஆம் ஆண்டு வெளிவந்த ‘புதுப்புது அர்த்தங்கள்’ திரைப்படத்தில், இவர் பேசிய ‘இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்’ என்ற வசனம் ரசிகர்கள் மத்தியில் விவேக்கை பிரபலப்படுத்தியது.

அதனை தொடர்ந்து, ‘ஒரு வீடு இரு வாசல்’, ‘புது மாப்பிள்ளை’, ‘கேளடி கண்மணி’, ‘இதய வாசல்’, ‘புத்தம் புது பயணம்’ என பல படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். ஒரு காலகட்டத்திற்கு பிறகு, வெறும் நகைச்சுவையை மட்டும் வெளிப்படுத்தும் காட்சிகளில் நடிக்காமல், நகைச்சுவை வாயிலாக பல முக்கியமான சமூக கருத்துக்களை வெளிப்படுத்தி, தமிழ் சினிமா ரசிகர்களை சிரிக்கவைத்ததோடு மட்டுமல்லாமல், சிந்திக்கவும் வைத்தார்.

விவேக்கின் நகைச்சுவை நடிப்பில் வெளியான ‘டும் டும் டும்’, ‘பூவெல்லாம் உன் வாசம்’, ‘அள்ளித்தந்த வானம்’, ‘ஷாஜகான்’, ‘மனதைத் திருடிவிட்டாய்’, ‘தென்காசிப் பட்டணம்’, ‘யூத்’, ‘ரன்’, ‘காதல் சடுகுடு’, ‘சாமி’, ‘விசில்’, ‘தென்னவன்’, ‘தூள்’, ‘பாய்ஸ்’, ‘திருமலை’, ‘பேரழகன்’, ‘அந்நியன்’, ‘சிவாஜி’, ‘பசுபதி மே/பா ராசக்காபாளையம்’, ‘சண்டை’, ‘படிக்காதவன்’, ‘பெருமாள்’, ‘குரு என் ஆளு’, ‘ஐந்தாம் படை’, ‘தம்பிக்கு இந்த ஊரு’, ‘சிங்கம்’, ‘பலே பாண்டியா’, ‘உத்தம புத்திரன்’, ‘சீடன்’, ‘மாப்பிள்ளை’, ‘வெடி’ போன்ற திரைப்படங்கள் இவருடைய நகைச்சுவையான நடிப்பிற்காகவே பலரும் ரசித்துள்ளனர்.

விவேக் எனும் மகா நடிகன், நல்ல மனிதன் | Vivek Sir Life Article

அப்துல் கலாம் - சின்ன கலைவாணர் விவேக்

இவருடைய நகைச்சுவை பெரும்பாலும் லஞ்சம், மக்கள் தொகை பெருக்கம், அரசியல் ஊழல்கள், மூட நம்பிக்கைப் போன்றவற்றை கருப்பொருளாகக் கொண்டு இருப்பதால், இவரை சினிமா ரசிகர்கள் ‘சின்னக் கலைவாணர்’ என்றும், ‘மக்களின் கலைஞன்’ என்றும் அடைமொழியிட்டு அழைக்கின்றனர். 

அதுமட்டுமின்றி முன்னாள் ஜனாதிபதி அப்துல் காலம் ஐயாவை, தனது முன்னோடியாக கொண்டு வாழ்ந்தவர் மனிதர்களின் இவரும் ஒருவர். அவரின் வழியில் இதுவரை சுமார் ஒரு கோடி மரக்கன்றுகளை நடுவேன்’ எனக்கூறி அவ்வப்போது இத்திட்டத்தினை செயல்படுத்தி மற்றவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்து வருகிறார் விவேக்.

 விவேக் எனும் மகா நடிகன், நல்ல மனிதன் | Vivek Sir Life Article

 விருதுகளும், மரியாதைகளும்

இந்திய அரசால் ‘பத்ம ஸ்ரீ’ விருது.

அனைத்து நேர விருப்பமான நகைச்சுவை நடிகருக்கான ‘விஜய் விருது’.

2002-ல் ‘ரன்’, 2003ல் ‘சாமி’, 2004-ல் ‘பேரழகன், 2007-ல் ‘சிவாஜி’ போன்ற திரைப்டங்களுக்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ‘ஃபிலிம்ஃபேர் விருது’.

‘உன்னருகே நானிருந்தால்’, 2002-ல் ‘ரன்’, 2003ல் ‘பார்த்திபன் கனவு’, 2007-ல் ‘சிவாஜி’ போன்ற திரைப்டங்களுக்காக தமிழ் நாடு அரசின் மாநில விருது வழங்கப்பட்டது.

சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ‘தேசிய தமிழ் திரைப்பட விருதுகள்’ பெற்றார்.

சிறந்த ஆண் நகைச்சுவை நடிகருக்கான ‘எடிசன் விருது’.

சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ‘கொடைக்கானல் பண்பலை வானொலி விருது’.

சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ‘ஐ.டி.எஃப்.ஏ விருது.

விவேக் எனும் மகா நடிகன், நல்ல மனிதன் | Vivek Sir Life Article

இவருடைய நகைச்சுவைக் காட்சிகள் வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமல்லாமல், வாழ்வியலை ஒரு சில நொடிகளிலேயே புரிய வைக்கும் ஆற்றலை உண்டாக்கியவையாகும். நகைச்சுவையில் பல சீர்திருத்த கருத்துக்களை திரைப்படங்களில் துணிவோடு எடுத்துக் கூறியவர் விவேக் என்று சொன்னால் அது மிகையாகாது.

இப்படிப்பட்ட மாபெரும் கலைஞரை, நல்ல மனிதரை தமிழ் திரையுலகம் இன்று இழந்துள்ளது. அவரின் ஆத்மா சாந்தியடைய அனைவருடன் இணைந்து சினிஉலகமும் இறைவனை பிரார்த்திக்கும்.

                                                                                 வி லவ் யு விவேகானந்தன்

                                                                             19 நவம்பர் 1961 - 17 ஏப்ரல் 2021 

                                                                                                      விவேக் எனும் மகா நடிகன், நல்ல மனிதன் | Vivek Sir Life Article


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US