மறைந்த நடிகர் விவேக்கின் அக்காவை பார்த்துள்ளீர்களா - முதல் முறையாக அவர் கலந்துகொண்ட முக்கிய நிகழ்ச்சி
தமிழ் திரையுலகில் தனது நகைச்சுவையின் மூலம் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தவர் சின்ன கலைவாணர் நடிகர் விவேக்.
இவர் கடந்த ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இவரது மறைவு, அவரது குடும்பத்தினரையும் தாண்டி பல தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களை கண்ணீர்விட வைத்தது.
நடிகர் விவேக்குக்கு அஞ்சலி செலுத்தும் விதத்தில், பிரபல முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவி, நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளது. இதில் பல திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், நடிகர் விவேக்குடன் பிறந்த, அவரது அக்காவும் இந்த நிகழ்ச்சியில் தனது தம்பிக்காக கலந்துகொண்டுள்ளார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
இதில் தனது தம்பி விவேக் குறித்து பல விஷயங்களை, அவர் பகிர்ந்துகொண்டார்.
இதோ அவரின் புகைப்படங்கள்..
