மணிமேகலை என் தங்கச்சி தான், எவ்வளவு கஷ்டம்... ஓபனாக பேசிய தொகுப்பாளினி அஞ்சனா
அஞ்சனா
தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் தொகுப்பாளினிகளில் ஒருவர் அஞ்சனா.
சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தனது பயணத்தை தொடங்கி இப்போது மக்கள் மனதில் பெரிய இடம் பிடித்தவர் அஞ்சனா. இவர் கயல் பட புகழ் சந்திரனை காதலித்து திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
திருமணம், குழந்தை பிறகு செம பிட்டாக மீண்டும் தனது சின்னத்திரை பயணத்தை துவங்கி கலக்கி வருகிறார்.
பிரபலத்தின் பேட்டி
சமீபத்தில் தொகுப்பாளினி அஞ்சனா, மணிமேகலை தனது தங்கை என அனைவரும் கேட்ட விஷயம் குறித்து பேசியுள்ளார்.
பேட்டியில் அவர், நீங்களும், மணிமேகலையும் சகோதரிகளா என்பார்கள், நான் இல்லைங்க என்று சொன்னால் நம்ப மாட்டார்கள். உங்ககை பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது, நீங்கள் எதற்காக பொய் சொல்லுறீங்க என்று கேட்கிறார்கள்.
ஒரு கட்டத்தில் ஆமா மணிமேகலை என்னுடைய தங்கச்சி தான் என்று நானே சொல்லி இருக்கிறேன். எனது வாழ்க்கையில் அப்பா இறப்பிற்கு பிறகு குடும்பத்தை சுமந்து செல்லும் பெரிய சுமை என்னை நோக்கி வந்தது.
அதை தாங்கிக் கொண்டு என்னுடைய திருமண வாழ்க்கையில் அதிலும் வெற்றிகரமாக பயணித்துக் கொண்டிருக்கிறேன்.