முக பொலிவுக்கு தொகுப்பாளினி அர்ச்சனா மகள் சாரா என்ன செய்கிறார் தெரியுமா?

Yathrika
in தொலைக்காட்சிReport this article
தொகுப்பாளினி அர்ச்சனா
தமிழ் சினிமாவில் 90களில் கலக்கிய தொகுப்பாளர்களில் ஒருவர் தான் அர்ச்சனா.
கலைஞர், விஜய், சன், ஜீ தமிழ் என தொடர்ந்து நிறைய தொலைக்காட்சிகளில் பணியாற்றிய அர்ச்சனா இப்போது ஜீ தமிழில் நிறைய ஷோக்கள் தொகுத்து வழங்கி வருகிறார்.
சரிகமப 3 நிகழ்ச்சியை அட்டகாசமாக தொகுத்து வழங்குகிறார். இவரது மகள் சாராவும் ஜீ தமிழில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருக்கிறார், இவரும் மக்களிடம் நன்கு பிரபலம் அடைந்துள்ளார்.
சொந்தமாக யூடியூப் பக்கம் திறந்து நிறைய விஷயங்களை பதிவிட்ட வண்ணம் உள்ளார்.
முக அழகு டிப்ஸ்
இயற்கையான முறையில் ஓட்ஸ், சர்க்கரை இவற்றை வைத்து தான் சாரா முகத்தை ஸ்க்ரப் செய்வாராம்.
முகத்தில் வரும் பருவை சரிசெய்ய சாரா பாலாடையை முகத்தில் அப்ளை செய்வாராம். தனது முகத்திற்கு தினமும் டோனராக ரோஸ் வாட்டர் பயன்படுத்துவாராம் சாரா. கடலை மாவு, கஸ்தூரி மஞ்சள், தயிர் சேர்த்து ஃபே* பேக்கை வாரம் ஒருமுறை முகத்தில் அப்ளை செய்வாராம்.
தினமும் கற்றாழை ஜெல் பயன்படுத்தும் வழக்கம் சாராவிடம் உள்ளதாம்.